கடைசில தன் கையும் தனக்கு உதவாம போயிடுச்சே! அடுத்து விஷால் என்னதான் செய்யப் போறாரு?

விஷால் என்றாலே பிரச்சனைகள் தான் என்ற அளவுக்கு அவரின் நிலைமை மாறிப் போயிருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் ஒரு பக்கம் சிக்கி இருப்பதாகவும் சரியான படங்கள் அவரை வந்து சேர்வதில்லை என்றும் உடல் நிலையில் கொஞ்சம் பிரச்சனைகள் இருப்பதாகவும் ஏகப்பட்ட சிக்கலில் இருப்பதாக அவரைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அவர் நடித்து சமீபத்தில் வெளியான ரத்னம் திரைப்படம் கூட எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு ஒரு கம் பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது.

ரத்னம் திரைப்படத்திற்கு பிறகு விஷால் துப்பறிவாளன் 2 படத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியானது. அதுவும் இந்த படத்தை அவரே இயக்கி நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வந்த தகவலின் படி துப்பறிவாளன் 2 திரைப்படம் ட்ராப் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் விஷால் எதிர்பார்த்த பணத்தை கொடுக்க எந்த ஒரு பைனான்ஸ் நிறுவனமும் முன்வரவில்லை. அதனால் இந்த படத்தை அப்படியே டிராப் செய்யலாம் என சொல்லி இருக்கிறார்களாம். இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்றால் ஏற்கனவே விஷாலுக்கு உதவி செய்யப் போய் லைக்கா நிறுவனத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றார் விஷால்.

அதைப்போல வேறு ஏதாவது நிறுவனம் பண உதவி செய்து அவர்களையும் நீதிமன்றம் வரை இழுத்து விடுவாரோ என்ற ஒரு பயத்தினால் எந்த ஒரு நிறுவனமும் துப்பறிவாளன் 2 படத்திற்காக பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை.

இதனால் இந்த படத்தை அப்படியே டிராப் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் விஷால். அதற்கு அடுத்தபடியாக சமுத்திரக்கனி இயக்கத்தில் விஷால் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அந்தப் படமாவது இவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சமீப காலமாகவே விஷால் நடிப்பில் வெளியாகும் படங்கள் அந்த அளவு மக்களை சென்றடையவில்லை என்பதுதான் பொதுவான கருத்தாக பார்க்கப்படுகிறது. இனிமேலாவது அவருக்கு ஒரு நல்ல படம் அமைய வேண்டும் என வேண்டிக் கொள்வோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews