வெளியாகும் முன்பே பல கோடி லாபம் பார்த்த விஷால் படம்….!

தமிழில் ஓரளவிற்கு சுமாரான வெற்றி படங்களை வழங்கி டாப் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஷால். ஆரம்பத்தில் இவரது படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான எனிமி படம் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

vishall

தற்போது விஷால் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படம் இந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வலிமை மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் பின்வாங்கியதால் வீரமே வாகை சூடும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின்
தமிழக திரையரங்கு விநியோக கோடிக்கணக்கில் விலை போயுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, வீரமே வாகை சூடும் படத்தின் திரையரங்க உரிமையை சுப்பையா சண்முகம் என்பவர் சுமார் 10.5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோலிவுட் ஆச்சரியத்தில் உள்ளது. ஏனெனில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குகிற இந்த சூழலில் வீரமே வாகை சூடும் படம் இவ்வளவு விலைக்கு போயிருப்பது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதுதவிர சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் தெலுங்கு உரிமை ஆகியவற்றின் மூலமும் சில பல கோடிகள் விஷாலுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு பெரிய தொகை லாபம் பார்த்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment