விஷாலின் ‘லத்தி’ செம மொக்கை.. டுவிட்டர் விமர்சனத்தால் பரபரப்பு

விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இன்று காலை முதல் இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் படம் குறித்த விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த படத்தில் கடைசி அரைமணி நேரம் கொண்ட ஆக்ஷன் காட்சிகள் தவிர இந்த படத்தில் எதுவுமே இல்லை என்றும் விஷால் தனது உயிரை கொடுத்து நடித்திருந்தும், வலுவில்லாத திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் படத்தை கெடுத்து விட்டது என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

lathi 1644641172 1

நடிகர் விஷாலுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப்படங்கள் வராத நிலையில் இந்த படமாவது அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படமும் தோல்வி படமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பல தியேட்டர்களில் ஒரு சில பார்வையாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டரில் ஒரே ஒரு நபர் மட்டுமே திரையரங்கில் இருந்ததால் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.