23 கோடி பட்ஜெட், வெறும் 3 கோடி மட்டுமே வசூல்: ‘லத்தி’ படக்குழு அதிர்ச்சி

விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் வெறும் 3.50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக வெளிவந்து இருக்கும் செய்தி படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

விஷால் நடிப்பில் வினோத் குமார் இயக்கத்தில் உருவான ‘லத்தி’ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 23 கோடி என்றும் இந்த படம் சுமார் 30 கோடி வசூல் செய்தால் மட்டுமே அனைத்து தரப்பிற்கும் லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

அதற்காக விஷால் பல நாட்கள் இந்த படத்திற்காக புரமோஷன் செய்தும் இந்தப்படம் எதிர்பார்த்த ஓபனிங் வசூலை பெறவில்லை. முதல் நாள் முதல் காட்சியே தியெட்டர் காலியாக இருந்தது என்றும் அடுத்தடுத்து வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணத்தால் ஒரு சிலர் மட்டுமே தியேட்டரில் படம் பார்த்ததாக கூறப்படுகிறது.

எனவே ‘லத்தி’ படத்தின் 3 நாள் வசூல் வெறும் 3.50 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

விஷலின் நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் நந்தா ஆகியோர் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள் என்று கூறப்பட்டாலும் விஷாலின் பணம் தான் இந்த படத்திற்கு வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எனவே விஷாலுக்கு தனிப்பட்ட முறையில் இந்த படத்தில் மிகப்பெரிய நஷ்டம் என்று தான் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.