ரஜினி பட வில்லன் பெயரை தன் படத்திற்கு தலைப்பாக வைத்த விஷால்…. இந்த பெயரை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?

விஷால் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான எனிமி படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் விஷால் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் படம் இம்மாதம் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஷாலே இயக்கி நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மேலும் ஒரு சில படங்களில் விஷால் ஒப்பந்தமாகி உள்ளார்.

மார்க் ஆண்டனி

அந்த வரிசையில் தமிழில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது அந்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு மார்க் ஆண்டனி என பெயர் வைத்துள்ளனர்.

இந்த பெயரை 90’ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ரகுவரனின் பெயர் தான் மார்க் ஆண்டனி. இந்த பெயர் தற்போது வரை ஒரு பிராண்ட் நேமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் விஷால் அவரின் படத்திற்கு இந்த தலைப்பை தேர்வு செய்துள்ளார். தலைப்பு என்னமோ நல்லா தான் இருக்கு. ஆனா இயக்குனர நினைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். காரணம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் எதுவும் ஓடவில்லை. எனவே இந்த படம் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment