சிக்கியது 8 பேர்… சிக்கலில் இன்னும் எத்தனை பேர்… விருதுநகர் பாலியல் வழக்கில் அதிரடி திருப்பம்!
விருதுநகரில் இளம் பெண்ணை காதலிப்பது போல் ஏமாற்றி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலத் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர்களான ரைஸ்மில் உரிமையாளர் மகன் ஜூனத் அகமது (27), ஓட்டுநர் பிரவீன் (21), மற்றும் 9-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளாக இருப்பதால் அவர்களை கையகப்படுத்தி இளைஞர் நீதிமன்றகுழுமம் முன்பாக ஆஜர் செய்து அவர்களின் உத்தரவுபடி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணையும் நிறைவுற்றது. இதனையடுத்து
கைது செய்யப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் 5 குழுக்களாக சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் அவர்களின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர்.
அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்ட 8 பேரின் செல்போன்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றையும் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனை மூலம், வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
