சசிக்குமாரின் அடுத்த படத்தை இயக்கும் விருமாண்டி

0803102bfd71f9811b7a9107c24c3786

சில நாட்கள் முன் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மிகுந்த வெற்றியடையாவிட்டாலும் எல்லோரிடமும் பேசப்பட்ட படமாக இருந்தது. வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஒரு எளியவன் அங்கு இறந்த பிறகு இந்தியாவுக்குள் அவர் உடலை கொண்டு வர என்ன என்ன பாடுபட வேண்டி இருக்கிறது என இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாதவற்றை சொல்லி இருந்தார் இயக்குனர் விருமாண்டி.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் கதையாக இது இருந்தது.

 இந்த படம் ஓடிடி ப்ளாட்பார்மில் தான் வெளியானது. இந்த படத்தின் இயக்குனர் விருமாண்டி. தென்மாவட்டத்தை சார்ந்தவர். இவர் தென்மாவட்ட கதைகளில் நடித்து களம் கண்ட இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாரை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். சசிக்குமார் தற்போது எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.