கார்த்தியின் பிறந்த நாளில் வெளியானது விருமன் பட பாடல் !!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

viru 1

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் வெளிவந்தது. இந்த பாடலை சித்ஸ்ரீராம் ,யுவன் சங்கர் ராஜாவும் பாடி இருக்கிறார்.கருமாத்தூர் மணிமாறன் எழுத்தில் பாடல் அமைந்துள்ளது

கஞ்சா பூ கண்ணாலே செப்புச்சிலை உன்னாலே இடுப்பு வேட்டி அவருதடி நீ சிரிச்சா தன்னாலே என தொடங்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

viru 2

இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், மனோஜ் பாரதிராஜா, சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.விருமன் படத்தின் பின்னணி பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்திவிடுமுறை நாளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

டிக்டாக் ஜி பி முத்துக்கு தனி கேரவன் !!.. அப்படி எந்த படத்தில் நடிக்கிறார்?? ..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment