விஷால் நடித்த மருது, கார்த்தி நடித்த கொம்பன், சசிக்குமார் நடித்த குட்டிப்புலி, விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி, கெளதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியவர் முத்தையா.
இவரது படம் ஜாதி அடிப்படையில் இருப்பதாக பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் தகவல் வெளியாகியுள்ளது. அதை எல்லாம் இவர் மறுத்துள்ளார்.
முத்தையா இப்போது கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை இயக்கி வருகிறார். வழக்கமான அதிரடிகளுடன் தயாராகியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார். டாக்டருக்கு படித்து பட்டம்பெற்றுள்ள அதிதி ஷங்கருக்கு இது முதல் படமாகும்.
இந்த நிலையில் நாளை காலை 10 மணி அளவில் விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.