Connect with us

வெயிலின் மத்தியில் வெளுத்து வாங்கிய மழை!! அதுவும் முதலிடத்தில் விருதுநகர்;

rain 1

தமிழகம்

வெயிலின் மத்தியில் வெளுத்து வாங்கிய மழை!! அதுவும் முதலிடத்தில் விருதுநகர்;

எதிர்பாராதவிதமாக நேற்றைய தினம் மாலையில் சட்டென்று வானிலை மாறியது. அதுவும் குறிப்பாக நேற்று இரவு குளிர்ந்த காற்று தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் வீசிய தொடங்கியது. இதன் விளைவாக நேற்று பல இடங்களில் மழையும் பெய்தது.

மேலும் மீனவர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் எச்சரிக்கப்பட்டுள்ளது. காரணம் கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதையெல்லாம் தாண்டி நேற்று விருதுநகர் மாவட்டத்தில் ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி அந்த மாவட்ட மக்களுக்கு இதமான வானிலையை கொடுத்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 6 மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கொடைக்கானல் படகு குழாம், உதகையில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

காரியாபட்டியில் 3 சென்டி மீட்டர் மழையும்,  பெரியநாயக்கன்பாளையத்தில் 2 சென்டி மீட்டர் மழையும், திருச்செங்கோடு, கொடைக்கானல், சிவகாசியில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆலக்கரை, பில்லி மலை, அவினாசி, கேத்தி, சோலையாறு ஆகிய இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top