காவல்துறை மட்டுமல்ல கலெக்டரும் உங்கள் நண்பன் தான்! கெத்து காட்டும் விருதுநகர் கலெக்டர்!!

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தான் டிரெண்டிங்கில் உள்ளார். இதற்கு காரணம் இவர் மாணவர்களிடம் நண்பரை போல உரையாடுவது தான். நாமெல்லாம் பள்ளி கல்லூரிக்கு விடுமுறையா இல்லையா என்பதை செய்தியை பார்த்து தானே தெரிந்து கொள்வோம். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் அப்படி அல்ல.

விருதுநகர் மாவட்ட மாணவர்கள் சற்று வித்தாயாசமாக பள்ளிக்கு விடுமுறை உண்டா இல்லையா என்பதை நேரடியாக கலெக்டரிடமே கேட்டு தெரிந்து கொள்கிளார்கள். அட ஆமாங்க ஏதோ நண்பனிடம் கேட்பது போல் மாணவர்கள் கலெக்டருக்கு டிவிட் செய்வதும் அவரும் பதில் டிவிட் செய்வதும் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, விஜய் சிவா விஷ்ணு என்ற மாணவர், “மழை பெய்துவருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?” என ஆட்சியர் மேகநாதரெட்டியின் ட்விட்டர் பக்கத்தில் இரவு 10 மணிக்குக் கேள்வி எழுப்பினார். இதை பார்த்த அவர், “இனி விடுமுறை கிடையாது. சூரியன் வெளியே தெரிகிறது. காலையில் ஸ்கூலுக்குப் போ. படி, விளையாடு மகிழ்ச்சியாக இரு. விருதுநகர் மாவட்டத்தில் நன்றாக மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்” என பதிலளித்தார்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் 18 பொது இடங்களுக்கு செல்ல தடை!: கிருஷ்ணகிரி கலெக்டர் உத்தரவு!!

இதுமட்டும் இல்லைங்க சமீபத்தில் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார். இதற்கு பல மாணவர்கள் டிவிட்டரில் நன்றி தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த மேகநாத ரெட்டி, “தம்பிகளா… நன்றியெல்லாம் போதும். சோஷியல் மீடியா, ஃபேஸ்புக் பக்கங்களை மூடிவிட்டு, சோஷியல் சயின்ஸ் புத்தகத்தைத் திறந்து, அமர்ந்து படியுங்கள். நாளை காலையில் தேர்வு இருக்கிறது. பாதுகாப்பாக இருங்கள்” என பதிவு செய்திருந்தார்.

Meghanath Reddy

இப்படி சிறியவர் பெரியவர் என யார் கேள்வி கேட்டாலும் டென்ஷன் ஆகாமல் பொறுமையாக பதிலளித்து வருகிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி. மாணவர்களுடன் நண்பரை போல் நகைச்சுவையாக உரையாடும் மேகநாத ரெட்டி காவல்துறை மட்டுமல்ல கலெக்டரும் மக்களின் நண்பன் தான் என்பதை செயல் மூலம் நிரூபித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment