விருதுநகர் கலெக்டரை மிஞ்சிய நாகை கலெக்டர்! உறைந்து பார்த்த பொதுமக்கள்!!

நம் தமிழகத்தில் தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொருவரும் துடிப்போடு காணப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் மக்களின் குறைகளை நேரடியாக கேட்கும் எண்ணத்தோடு பணியாற்றுகின்றனர்.

அவர்களில் குறிப்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ட்விட்டர் வாயிலாக மாணவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் மற்றொரு மாவட்ட ஆட்சியர் மக்களை கவரும் வகையில் செயலில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி நாகை மாவட்ட ஆட்சியர் மிதிவண்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வீட்டில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மிதிவண்டியில் வந்தார் நாகை மாவட்ட ஆட்சியர்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் வந்தார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ். நாகை மாவட்ட ஆட்சியரோடு சக அதிகாரிகளும் சைக்கிளில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து காணப்பட்டனர். அவர்களும் இது போன்று சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஈடுபடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment