விருச்சிகம் வைகாசி மாத ராசி பலன் 2023!

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும்.

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை 7 ஆம் இடத்தில் சூர்ய பகவான் இட அமர்வு செய்துள்ளார். மனைவிவழியிலான உறவுகளால் ஆதாயப் பலன்கள் கிடைக்கப் பெறும். யோகம், அனுகூலம் நிறைந்த மாதமாக வைகாசி மாதம் இருக்கும்.

புதிதாகத் தொழில் துவங்க நினைப்போர் சிறிதும் தயங்காமல் தொழிலைத் துவக்கலாம், அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்ற காலகட்டமாகும். தொழில் சார்ந்து வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். வேலைவாய்ப்புரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு என நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கப் பெறும்.

பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். மேலும் சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். 9 ஆம் இடத்தில் சுக்கிர பகவானும் செவ்வாய் பகவானும் இணைந்து இட அமர்வு செய்துள்ளனர்.

வெளியூர்ப் பயணங்கள் அதிக அளவில் செய்யும் மாதமாக இருக்கும். கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். வீட்டில் உள்ள பெரியோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற்செய்தி கிடைக்கப் பெறும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கூடுதல் எச்சரிக்கை தேவை. பயணங்கள் மேற்கொள்ளும்போது சிறு சிறு தடைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒவ்வொரு வாரம் சனிக் கிழமையும் சென்று வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews