விருச்சிகம் தை மாத ராசி பலன் 2023!

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலை கிடைக்காமல் இருந்தோருக்கு புதிய வேலை கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையப் பெறும். தொழில்ரீதியாக வளர்ச்சி இருக்கும்.

ஆனால் ஆரோக்கியக் குறைபாடுகள் நிச்சயம் இருக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். அசையும், அசையாச் சொத்துகள் ரீதியாக முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தாய்- தந்தைரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும், தாய் வழி உறவினர்களால் நிச்சயம் உதவிகள் கிடைக்கப் பெறும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை நன்மைகள் அதிகரிக்கும் மாதமாக இருக்கும்.

வாக்கு ஸ்தானங்களைப் பொறுத்தவரை வாக்கு வன்மை ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் குறித்த நற் செய்தி கிடைக்கப் பெறும்.

அடுத்தவர்களின் விஷயங்களில் தலையீடு செய்யாதீர்கள். இது பெரும் பிரச்சினைக்கு இட்டுச் செல்லும். குழந்தைகளைப் பொறுத்தவரை உங்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களைச் செய்வர். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.

தொழில்துறையினைப் பொறுத்தவரை உற்பத்தி சார்ந்த தொழில் செய்வோருக்கு ஏற்றம் தரும் மாதமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews