விருச்சிகம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை 5ஆம் இடத்தில் குரு பகவான் அமர்ந்து இருந்து ஜென்ம ஸ்தானம், பாக்கிய ஸ்தானங்களைப் பார்க்கிறார்.

வேலைவாய்ப்புரீதியாக வெளியூர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதுநாள் வரையில் சரியான வேலைவாய்ப்புகள் அமையாத நிலையில் தற்போது உங்கள் முயற்சிக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை கிடைக்கும்.

தொழில்ரீதியாக அரசு வங்கிக் கடன்கள், மானியம் போன்றவை கிடைக்கப் பெறும்; தொழில்ரீதியாக மந்தநிலை நீடித்த நிலையில் தற்போது ஓரளவு நகர்வு இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை மிகக் கடுமையான முயற்சிகள், மிகக் கடுமையான செலவினங்களுக்குப் பின்னரே வரன் கைகூடும். வரன் தேடும் விஷயங்களில் பின் வாங்காமல், மனம் தளராமல் தேடவும்.

கடன் வாங்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து தேவை இருந்தால் மட்டுமே கடன் வாங்கவும். அடிக்கடி உடல் நலத் தொந்தரவுகள் ஏற்படும்; கடன் மற்றும் உடல் நலன் ரீதியாக கவனத்துடன் இருந்தால் மட்டுமே எதிர்கால பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

நரசிம்ம பெருமான் வழிபாடு செய்து வருதல் நல்லது. கால பைரவருக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வருதல் வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.