Connect with us

விருச்சிகம் ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!

Astrology

விருச்சிகம் ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!

விருச்சிகம் ராசியினருக்கு இந்த பங்குனி மாதம் துணிந்து வெற்றி பெரும் மாதமாக அமைகிறது. உங்கள் ராசியில் இருந்து கேது பகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு பல வித நன்மைகள் உண்டாகும். பக்தி மேம்படும், ஆன்மீக சுற்றலா சென்று வருவீர்கள்.

மார்ச் 26-ம் தேதிக்கு பிறகு சுக்ரன் சாதகமாக இருப்பதால் நன்மைகள் அதிகளவில் நடைபெறும். புதன் பகவான் சாதகமான வீட்டில் இருப்பதால் நண்பர்கள், உறவினர்கள் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் விதமாக இருக்கும்.

மனைவிவழி சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டாகும். மூத்த சகோதர, சகோதரி உங்கள் நிலை அறிந்து உங்களுக்கு உதவி புரிவார்கள். பொருளாதாரத்தில் நல்லவித முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்கள், சொந்த பந்தங்களிடம் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

ஏப்ரல் 10-ம் தேதிக்கு மேல் குரு பகவான் வக்கிரம் பெற்று துலாம் ராசிக்கு வருவதால் அதன் பிறகு விருச்சிகம் ராசிக்கு நற்பலன்கள் அவ்வளவாக கிடைக்காது. 10- ம் தேதி வரை குரு பகவான் விருச்சிகம் ராசியில் அமர்ந்து இருப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். உங்கள் மனதில் யாரும் உண்மையாக இல்லவேயில்லை என்ற எண்ணம் தோன்றக்கூடும். ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நிகழ்கிறது என்று வருத்தம் அடைவீர்கள். ஒரு சிலருக்கு சோர்வும், களைப்பும், மனவேதனையும் உண்டாகும்.

சுக்ரன் சாதகமான வீட்டில் ஐந்தாம் இடத்தில் வருவதால் பழுதான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை எல்லாம் மாற்றுவீர்கள். ஒரு சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். சுக்ரன் 27-ந்த தேதிக்கு பிறகு ஆறாம் வீட்டில் மறைவதால் வீண் அலைச்சல்கள், செலவுகள் வரக்கூடும். சிறு சிறு விபத்துகள் நிகழ வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சுக்ரன் சாதகமான மீனம் ராசியில் இருக்கும் பொழுது தொழில், வியாபாரத்தில் பணத்திற்கு சிறிதும் குறை இருக்காது. எதிரிகளின் தொல்லைகள் அவ்வப்பொழுது இருந்து கொண்டே இருக்கும்.

வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் ஆகும். இரும்பு, உணவு, வாகனம், எண்ணெய் போன்ற தொழில்களில் லாபம் வரக்கூடும். சனி பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. யாருக்கும் வாக்கு உறுதி கொடுக்க வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.

புதிய முயற்சிகள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றியடைவீர்கள்.

வேலையில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்றார் போல் ஊதியம் இல்லையே என்று அலுத்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்ள வைப்பார் புதன் பகவான். புதிய வேலை, பதவி, ஒப்பந்தம் எல்லாம் நல்ல படியாக முடிவு பெறும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மாணவ, மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை படிக் கேட்டு நடந்துக் கொள்ளுங்கள். படிப்பில் கவனம் சிதறாமல் , சிறிது சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.

பரிகாரம்:

சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடுங்கள். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் விளக்கேற்றி வழிபடுங்கள். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Astrology

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 16/05/2022

    By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். இன்று சந்திராஷ்டமம் ஆரம்பமாவதால் நிதானம், கவனம், பொறுமை,...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 15/05/2022

    By

      *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள்...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 14/05/2022

    By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பாராத தனவரவு கிடைக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாழ்க்கை துணையின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 13/05/2022

    By

      *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் -12/05/2022

    By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை...

To Top