விருச்சிகம் பங்குனி மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை சில புதிய அனுபவங்கள் ஏற்படும், மேலும் செலவினங்கள் பெரிய அளவில் ஏற்படும். செலவினங்களால் லாபம் ஏற்படாது; விரயச் செலவாகவே ஏற்படும்.

கடந்த காலங்களில் நீங்கள் செய்த பல தவறுகள் உங்களுக்குத் தற்போது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். மேலும் உங்களின் ரகசியங்களை யாரிடமும் பகிராமல் உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள்.

குடும்ப ஸ்தானத்தில் செவ்வாயின் பார்வை இருப்பதால் தேவையற்ற வார்த்தை ப்ரத்யோகம் இருக்கும்; மேலும் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். 5 ஆம் இடத்துக் குரு பகவான் 6 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகி, சாதகமான பலன்களைக் கொடுப்பார். குடும்ப ஸ்தானத்தை வலுப்படுத்துவார்.

உறவினர்களால் தொல்லைகள் ஏற்படும்; உறவினர்களின் விஷயங்களில் பட்டும் படாமல் இருத்தல் வேண்டும். தொழிலை அபிவிருத்தி செய்ய நினைப்போருக்கும், புதுத் தொழில் துவங்க நினைப்போருக்கும் அரசாங்கரீதியாக கடன்கள்/ உதவிகள் கிடைக்கப் பெறும்.

வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. இரவு நேரப் பயணங்களை முடிந்தளவு தவிர்க்கவும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் வளர்ச்சியை நோக்கிய பயணம் கொண்டு இருப்பீர்கள்; ஆனால் வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்படும்.

எதிர்பாலின நண்பர்களால் அவதூறுப் பேச்சுக்களுக்கு ஆளாவீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை கவனச் சிதறல்களுடன் இருப்பர். சுய தொழில் செய்வோருக்கு உழைப்பு அதிகரிக்கும் மாதமாக இருக்கும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.