விருச்சிகம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

5 ஆம் இடத்தில் குரு, 3 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி, 7 ஆம் இடத்தில் செவ்வாய், 11 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் என கோள்களின் இட அமைவு உள்ளது.

அக்டோபர் 1 முதல் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டம் வேலைவாய்ப்புரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றினை எதிர்பார்க்கலாம். திருமண காரியங்கள் கைகூடும் மாதமாக இருக்கும், வரனை உறுதி செய்து நிச்சயதார்த்தம் வரையில் செல்லும்.

சுப செலவுகள் நிச்சயம் குடும்பத்தில் இருக்கும், குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை சிறப்பானதாக இருக்கும். 17 ஆம் தேதிக்குப் பின் சூர்யன்- சுக்கிரன்- புதனின் இடப் பெயர்வு முதல் 15 நாட்கள் அளவு சாதகமானதாக இல்லை.

17 ஆம் தேதிக்குப் பின் குடும்பத்தில் உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களின் தலையீட்டைத் தவிர்த்தல் நல்லது. உடன் பிறப்புகளை உங்களின் முன் கோபத்தால் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

உடல் அலைச்சல், வெளியூர்ப் பயணங்கள் மற்றும் உறவினர்கள் வருகை என வீண் விரயச் செலவுகள் ஏற்படும். உடல் நலனைப் பொறுத்தவரை கால், முதுகு, எலும்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை ஞானத்துடன் செயல்படுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.