விருச்சிகம் மாசி மாத ராசி பலன் 2023!

திருமண காரியங்களைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த வரன்கள் கிடைக்காது; இதனால் மன வருத்தம் அடைந்து காணப்படுவீர்கள். கணவன்- மனைவி இடையேயான உறவில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சரியாகும்; இனி கணவன்- மனைவி இருவரும் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி, திருப்தி நிறைந்து காணப்படும், குடும்ப உறுப்பினர்களின் நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் பகவான் 7-ஆம் இடத்தில் இருப்பதால் கோபத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு பொறுமையுடன் செயல்படுங்கள்.

தாறுமாறான வார்த்தைகள் ப்ரயோகத்தால் தந்தைவழியிலான உறவினர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும். தாய்- தந்தையுடன் அனுசரணையுடன் நடந்து கொள்ளுங்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சுமாரான மாதமாக இருக்கும். மேல் அதிகாரிகளுடனான உறவில் கவனம் தேவை.

தொழில் ரீதியாக பெரிய அளவில் நஷ்டம் இல்லாமல் வியாபாரம் நடக்கும். தொழில் கூட்டாளர்களுடன் சிறிது கவனத்துடன் பேசுதல் நல்லது. குழந்தைகள்ரீதியாக சுப காரியச் செலவுகள் ஏற்படும். உடல்ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அது உடனடியாகச் சரியாகிவிடும்.

பழைய கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாகக் களம் இறங்குவீர்கள், பூர்வீகச் சொத்துகள்ரீதியிலான பிரச்சினைகளை தற்போதைக்குத் தள்ளிப் போடவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews