விருச்சிகம் மார்கழி மாத ராசி பலன் 2022!

தன்னம்பிக்கை அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெளிவான சிந்தனை, செயல்கள் இருக்கும், கடவுளின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

2 ஆம் இடத்தில் சூர்யன்- சுக்கிரன்- புதன் கோள்கள் இணைந்து காணப்படும். லட்சுமி கடாட்சம் நிறைந்த மாதமாக இருப்பதால் பணவரவு, பொருள் வரவு சிறப்பாக இருக்கும்.

சூர்யன் 2 ஆம் இடத்தில் இருப்பதால் வாக்கு வன்மை இருக்கும்; அதனால் பேசும்போது பார்த்துப் பேசுதல் வேண்டும். சனி பகவானின் ஆதரவால் எடுக்கும் சிறு முயற்சிகளும் பெரும் வெற்றியினைக் கொடுக்கும்.

வண்டி, வாகனங்கள் ரீதியாக செலவுகள் ஏற்படும். குல தெய்வத்தின் அனுகிரகம் கிடைக்கும் மாதமாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷமாக இருப்பீர்கள், மேலும் குழந்தைகள் கல்விரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள்.

6 ஆம் இடத்தில் இருக்கும் இராகு பகவான் அஷ்ட லட்சுமி யோகத்தினைத் தரவிருக்கிறார். எதிரிகளை ஓட ஓட விரட்டுவார். கடன்சுமை படிப்படியாகக் குறையும், கோர்ட்டில் வழக்கு இருந்தால் நேர்மறையான தீர்ப்புகள் கிடைக்கும்.

கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபடுகள் அதிகமாகும், அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுதல் நல்லது. பழைய கடன் வசூலாகும், ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். தாய் – தந்தை உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.