விருச்சிகம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

செவ்வாயின் நேரடி பார்வை விருச்சிகத்திற்கு வருகின்றது. சுக்கிரன் 2 ஆம் இடத்தில் இருந்து 3 ஆம் இடத்திற்கு இடப் பெயர்வு அடைகிறார். புதன் பகவானின் ஆதிக்கத்தால் அலைந்து திரிந்தாலும், சொல்லியதை செய்து முடிப்பீர்கள்.

5 ஆம் இடத்தில் குரு பகவான் அஷ்டமகுருவாக உள்ளார். சனி பகவான் 4 ஆம் இடத்தில் உள்ளார். சனி பகவானின் இட அமைவால் செய்யும் செயல்களில் தடைகள் வருவதால் எதையும் செய்யும் முன் நிதானித்துச் செயல்படுதல் வேண்டும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எந்தவொரு குறையும் இல்லாமல் நினைத்ததுபோன்ற வரன் கைகூடும், திருமண காரியங்கள் விறுவிறுவென நடக்கப் பெறும்.

பணபலம் அதிகரிக்கும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். உடல் ஆரோக்கியம்ரீதியாக கவனம் செலுத்துதல் வேண்டும், தாய், தந்தையரின் உடல் ஆரோக்கியம் ரீதியாக செலவினங்கள் ஏற்படும்.

வீடு வாங்குதல், வண்டி, வாகனங்கள் வாங்குதல் ரீதியாக ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் நல்லது. செவ்வாயின் பார்வையால் குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இருவரும் மனம் திறந்து பேசுவீர்கள். இதனால் உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக தெளிவான சிந்தனையுடன் இருப்பார்கள். ஆனால் அவ்வப்போது கவனச் சிதறல் ஏற்படும்போது விழிப்புணர்வுடன் இருத்தல் நல்லது.

இல்லத்தரசிகள் கெட்டிக்காரத்தனமாகச் செயல்படுவார்கள். மேலும் உடல் சோர்வு, வேலைப் பளு போன்றவற்றால் உடல் நலக் குறைவு ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews