விருச்சிகம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்கு 6 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். விருச்சிக ராசிக்காரகளுக்கு ஏற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். எதிரிகளின் விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். எதிரிகளிடம் கோபத்தைக் காட்டாமல் விலகிச் செல்லுதல் வேண்டும்.

கோர்ட் வழக்குகள் சார்ந்த விஷயங்கள் உங்களுக்குப் பெரும் மன வருத்தத்தினையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. வேலைரீதியாக அனுகூலமான விஷயங்கள் நடைபெறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

வியாபாரம் மற்றும் தொழில்துறைகளில் வேலைபார்த்து வந்தோர் சொந்தமாகத் தொழிலைத் துவக்குவர். உயர்கல்வி ரீதியாக நீங்கள் கண்ட கனவுகள் நிறைவேறும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்க அட்வான்ஸ் கொடுப்பீர்கள்.

நீண்டநாட்களாக வீடு குறித்த புதுப்பித்தல் வேலை செய்ய நினைத்தநிலையில் அதற்கான முழு முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

வேலைவாய்ப்புரீதியாக உங்களுக்குப் பிடிக்காத வேலையினைவிட்டு உங்கள் திறமைக்கேற்ற வேலையினைத் தேடுவீர்கள். மேலும் வேலை செய்யும் இடங்களில் மேல் அதிகாரிகள் உங்களுக்குப் பொறுப்புகளைக் கொடுப்பார்கள்.

பொறுப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். சக பணியாளர்களிடையே உங்களுடைய செல்வாக்கு உயரும்.   சுப காரியத் தடைகள் ஏற்படும். குல தெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்து வருவது நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.