விருச்சிகம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை சூர்யன் 1 ஆம் இடத்திலும், 5 ஆம் இடத்தில் குரு பகவான், 7 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது.

2 ஆம் இடத்தில் சுக்கிரன்-புதன் இணைந்து உள்ளது. ராகு-கேது இடையூறு கிடையாது. வேலைவாய்ப்புரீதியாக குரு பகவானின் ஆசியால் நேர்மறையான பலன்கள் கிடைக்கப் பெறும்.

லாபம், ஆதாயம், முன்னேற்றம், சிறப்பான வேலை என நீங்கள் நினைத்த அனைத்தும் ஈடேறும் மாதமாக இருக்கும். செவ்வாயின் வக்ரத்தால் மனதளவில் எதிர்காலம் குறித்து கவலை கொண்டு இருப்பீர்கள்.

மாற்றங்களை எதையும் செய்ய நினைத்தால் நிச்சயம் தொட்டது துலங்கும், வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதாரம் நிறைவானதாக இருக்கும், ஆனால் அதற்கேற்ப செலவுகள் இருக்கும்.

குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதீல் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். மேலும் குல தெய்வக் கோயிலுக்கு நிலுவையில் இருக்கும் வேண்டுதலை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்விரீதியாக மேம்பட்டு இருப்பர்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை திட்டமிட்டபடி நடக்காவிட்டாலும், விறுவிறுவென காரியங்கள் அனைத்தும் நடக்கும். உடல் ஆரோக்கியம்ரீதியாக பெரிய அளவில் எதிர்மறையான விஷயங்கள் எதுவும் இல்லை.

மனதளவிலான அதிர்வுகள் சரியில்லாவிட்டாலும், செயல் அளவில் எடுக்கும் முடிவுகள் வெற்றியினைக் கையோடு கொடுக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews