விருச்சிகம் சித்திரை மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை 5ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். ராசிநாதன் செவ்வாய் பகவான் கடக ராசிக்குப் பெயர்ச்சியாகி நீச்ச ஸ்தானம் அடைகிறார்; செவ்வாய் பகவான் தடுமாற்றத்தினை ஏற்படுத்துவார்.

விரய ஸ்தானத்தின் மீது ராசிநாதன் செவ்வாயின் பார்வை விழுகின்றது; செலவுகள் அதிகரிக்கும். உடல் ரீதியாக சோர்வுகள் அதிகரிக்கும், அலைச்சல்கள் நிறைந்த மாதமாக இருக்கும். ஆரோக்கியம்ரீதியாக ஏற்பட்ட பெரும் பாதிப்புகளில் இருந்து மீள்வீர்கள்.

தவறான நண்பர்களுடன் உறவு ஏற்பட வாய்ப்புண்டு; 6 ஆம் இடத்தில் குரு பகவான் மறைவதால் குடும்ப ஸ்தானம் வலுப் பெற்று இருக்கும். பண வரவுகளைப் பொறுத்தவரை தாராளமான பணப் புழக்கம் இருக்கும். இரவு பகல் பாராது உழைக்கும்படியான சூழ்நிலை இருக்கும்.

தொழில்ரீதியாக உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதமாக இருக்கும். உங்களின் கடுமையான முயற்சிக்கு சனி பகவான் கைகொடுப்பார். தான தர்மங்கள் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வெள்ளிக் கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

வேலைவாய்ப்புரீதியாக பல ஆண்டுகள் எதிர்பார்த்த இடமாற்றம், வேலை மாற்றம் என்பது போன்ற விஷயங்கள் நடக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews