விருச்சிகம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருப்பதால் உடல் நலனில் அக்கறை தேவை. தொழில்ரீதியாக பெரிய அளவில் அலைச்சல், தூக்கமின்மை ஏற்படும்.

ராசிக்கு 5 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டுக் காணப்படும். மாணவர்கள் கல்வியில் மேம்பட்டுக் காணப்படுவார்கள்.

தொழில்துறை ரீதியாக புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைள் குறித்து தற்போதைக்கு எதையும் பேசாமல் இருத்தல் நல்லது.

இராசிக்கு 3 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பது தைரியத்தினைக் கொடுக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.

ராசிக்கு 6 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் பழைய கடன் வசூலாகும். தொழில்துறை ரீதியாக முன்னேற்றம் இருக்கும். தொழில் அபிவிருத்தி செய்ய நினைப்போர் துணிந்து செய்யலாம்.

சுக்கிரன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் மனைவியின் உடல் நலன் சார்ந்த விரயச் செலவுகளை ஏற்படுத்தும். தந்தையுடனான உறவு மேம்படும், வேலைவாய்ப்பு ரீதியாக சக பணியாளர்கள், மேலதிகாரிகளுடனான உறவு மேம்படும்.

கணவன் – மனைவி இடையேயான உறவில் பிரச்சினைகள் ஏற்படும். முருகப் பெருமானை வழிபட்டு வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews