விருச்சிகம் ஆவணி மாத ராசி பலன் 2022!

மன அழுத்தத்தைத் தீர்க்கும் காலகட்டமாக ஆவணி மாதம் இருக்கும், உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும் காலகட்டமாக இருக்கும்.

தொழில் செய்வோர் தைரியமாக அபிவிருத்தி செய்யலாம், மேலும் புதிதாகத் தொழில் துவங்குவோருக்கும் மிகச் சிறந்த காலம் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

சுப காரியங்கள் சார்ந்த விஷயங்களில் பல ஆண்டுகளாக இருந்த தடைகள் நீங்கும். மன அழுத்தம், பாரம் அனைத்தும் குறைந்து மன நிம்மதி அதிகரித்துக் காணப்படுவீர்கள்.

தனிப்பட்ட செல்வாக்கு உயர்ந்து உறவினர்களால் மெச்சப்படுவீர்கள். குழந்தைகள் படிப்பு ரீதியாக இருந்த கவலைகள் மறையும். பூர்விகச் சொத்துகள் ரீதியாக பல ஆண்டுகள் இருந்த பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த சுப காரியங்கள் நடக்கப் பெறும். ஆனாலும் பெற்றோர் – பிள்ளை உறவில் மனக் கசப்புகள் ஏற்படும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அனுகூலத்தை ஏற்படுத்தும்.

நரசிம்மர் வழிபாடு 6 இல் இருக்கும் இராகுவின் தாக்கத்தைக் குறைக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் அரசுத் துறை சார்ந்து இருப்பவர்களுக்கும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.

பலரால் மெச்சப்படும் வாழ்க்கையினை வாழ்வீர்கள். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு பிரச்சினைகளை விலக்கிக் கொடுக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.