விருச்சிகம் ஆவணி மாத ராசி பலன் 2018!

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் பேச்சில் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சூரியன், கேது, செவ்வாய் நற்பலன்களை கொடுப்பர். சுக்கிரன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார், உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும்.

ஆகஸ்ட் 28-ம் தேதி வரை புதன் சாதகமற்ற பலன்களை தருவதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். இல்லத்தில் இருப்பவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் வீண் விரோதம், பகை ஏற்படுத்தி கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏற்படும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் குருவால் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

சொந்த பந்த வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வீடு, மனை, வாகனம், விலையுர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் அமையும். செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத வகையில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.

மாத முற்பகுதியை விட பிற்பகுதியில் வளர்ச்சியான மாதமாக இருக்கப் போகின்றது. ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பிறகு, புதன் சூரியன் இணைந்து ’புத ஆதித்ய யோகம்’ உண்டாவதால் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி விறுவிறுப்புடன் நடைபெறும். விருச்சிகம் ராசியினருக்கு அவரவரின் வயதிற்கேற்ப மாற்றங்களும், பதவி உயர்வும் கிடைக்கும். மொத்தத்தில் விருச்சிகம் ராசியினருக்கு தடைகள் விலகி, நல்லவைகள் நடைபெற ஆரம்பிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment