Astrology
விருச்சிகம் ஆனி மாதம் ராசி பலன்கள் 2018!
அன்புள்ள விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த ஆனி மாதம் துன்பம் நீங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்றுள்ளதால் நல்லவை நடைபெறும். இதுவரை உங்கள் இரண்டாம் வீட்டில் இருக்கும் சனி பகவானால் பலவித துன்பங்கள், சங்கடங்களை சந்தித்து வந்தீர்களே இனிமேல் அந்த நிலை மாறும். உங்களுக்கு நிம்மதியான சூழல் உருவாகும். சனி பகவான் உங்களுக்கு இரட்டிப்பாக பலன்களை கொடுக்கப் போகின்றார்.
தன்னம்பிக்கைக் கூடும், தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சுயமாக செயல்பட்டு பலவித காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு சாதனை புரிவீர்கள். குறிப்பாக அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கெடுதலான அமைப்புகள் விலகி நல்லவை நடைபெறும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் அவ்வப்போது மன உளைச்சல் ஏற்படும் சம்பவங்கள் நிகழக்கூடும்.
எதிரிகள் தானாகவே விலகி செல்வார்கள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வருமானம் சீராக வந்தாலும், செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கும். ஒரு சிலருக்கு உடல் நலத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். உபரி வருமானம் வரக்கூடும் என்பதால் சேமிக்க முயற்சி செய்யுங்கள். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். கணினி, கணிதம் மற்றும் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது பதவி உயர்வு வரக்கூடும்.
