Connect with us

விருச்சிகம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

Rasipalan

விருச்சிகம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் தொட்டது துலங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று வக்ர இயக்கத்தில் 3-ம் இடத்தில் கேதுவுடன் இணைந்து இருப்பதால் நற்பலன்களைக் கொடுப்பார். உங்கள் தனாதிபதி குரு பகவான் வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கொடுப்பார். இல்லத்தில் ஒற்றுமை உண்டாகும்.

குடும்பத்தில் சுப விசேஷங்கள் அடுத்தடுத்து நல்லபடியாக முடிவடையும். புதிய ஒப்பந்தங்கள் வரக்கூடும். உங்கள் ராசிக்கு 10-ம் அதிபதி சூரியன், புதன், ராகுவுடன் 9-ம் இடத்தில் இருப்பதால் ஒளிமயமான எதிர்காலம் உருவாக போகின்றது. இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து எண்ணற்ற சோதனைகள், இடையூறுகளைக் கொடுத்து வந்தார். இனி அவர் வக்ர இயக்கத்தில் இருப்பதால் இடையூறுகளை அகற்றி வெற்றிக்கு வழிவகுப்பார். சனி பகவான் 10-ம் பார்வையாக, சிறப்பாக இருப்பதால் உங்களின் தொழில் மேம்படும். பொன், பொருள், ஆபரணம், ஆடை சேர்க்கை உண்டாகும்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இல்லத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் உண்டாகும்  என்பதால் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். தாய்வழி ஆதரவு கிட்டும்.

ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சாரம் செய்வதால் பணவரவு தாரளமாக வரக்கூடும். உறவினர்கள் வருகை அடிக்கடி இருக்கும். பாதச் சனி தொடர்வதால் ஆடி வெள்ளிக்கிழமைதோறும் பெண் தெய்வத்தை வழிபட்டு வந்தால் சகல தடைகளும் விலகி நல்வழி காட்டுவாள். மொத்தத்தில் விருச்சிகம் ராசியினருக்கு இந்த ஆடி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப் போகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top