விரதத்தில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?!

இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் விரதம் என்னும் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். விரதம் என்ற சொல்லுக்கு உணவை குறைத்தல், அல்லது உணவை உண்ணாமல் தவிர்ப்பது என பொருள்படும். விரதத்திற்கு இணையாக உபவாசம், நோன்பு என்ற வார்த்தைகளையும் கேள்விப்பட்டிருப்போம். உபவாசம் என்றால் இறைவனின் அருகே வசித்தல் என பொருள்படும். ஓரிரு வேளையோ அல்லது நாட்கள் கணக்கிலோ எந்த உணவையும் உண்ணாமல் தவிர்த்து, இறை சிந்தனையிலேயே இருப்பதுதான் உபவாசம். விரதம் இருப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, மனதையும் அடக்கி திரிகரண சுத்தியுடன் இருக்க வேண்டுமென்பது நியதி. மனிதன் பெற வேண்டிய புண்ணியம் என 7னை பெரியவர்கள் வகைப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான் விரதம் அனுஷ்டிப்பது. விரதம் இருப்பதால் மனம், அறிவு தூய்மை பெறும். விரதம் இருப்பதால் ஞானம், நல்லறிவு கிடைக்கும்..

விரதத்தின் மகிமைகளை பார்த்தோம். இனி விரதத்தில் 27 வகைகள் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்..

1. உணவு, பால், பழம் , நீர் மட்டுமல்லாமல் உமிழ்நீர் அதாவது எச்சிலைக்கூட விழுங்காமல் இருப்பது.. யோகிகள், முனிகள், ரிஷிகளால் மட்டுமே இக்கடுமையான விரத்தை அனுஷ்டிப்பர்.

2. உணவினை தவிர்த்து தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் எதாவது ஒன்றினை அருந்தி விரதம் இருப்பது…

3.பசுவின் பால் மட்டும் அருந்தி விரதம் இருத்தல்.

4.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல்.

5.காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.6.பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

7.இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

8.மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

9.மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

10.மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

11.21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் இருத்தல்.

12.மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

13.இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

14.ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

15.ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

2f271e61d9565e20dd705db62b8d83f5-1

16.ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல்.

17.ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி விரதம் இருத்தல்.

18.ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

19.ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

20.தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என விரதம் இருத்தல்.

21.ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி விரதம் இருத்தல்.

22.ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி விரதம் இருத்தல்.

23.ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி விரதம் இருத்தல்.

24.இரு வேளை உணவுடன் விரதம் இருத்தல்.

25.முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் விரதம் இருத்தல்.

26.மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு விரதம் இருத்தல்.

27.வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் விரதம் இருத்தல்

மேற்சொன்ன 27 விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என குழப்பம் வருகிறதா?! உடல் நிலைக்கும், வாழ்வியல் முறைகள், அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த விரதத்தையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனா, எந்தவித விரதமானாலும் இறைசிந்தனையோடும், புலன் அடக்கத்தோடும், வைராக்கியத்தோடும் இருப்பது அவசியம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews