களத்தில் ஆவேசமாக மோதிக்கொண்ட விராத் கோஹ்லி – காம்பீர் .. 100% அபராதம்.. என்ன நடந்தது?

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி முடிந்த பின்னர் கோலி மற்றும் காம்பீர் ஆகிய இருவருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. டு பிளசிஸ் 44 ரன்கள், விராட் கோலி 31 ரன்கள் அடித்தனர்.

இதனை அடுத்து 127 என்ற எளிய இலக்கை நோக்கி லக்னோ அணி பேட்டிங் செய்தது என்பதும், ஆனால் அந்த அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி வீரர் மேயர்  என்பவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென காம்பீர் வந்து மேயரை கையை பிடித்து அழைத்துச் சென்றார். இதனால் விராத்கோலி மற்றும் காம்பீர் ஆகிய இருவர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு இதேபோல் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதிக்கொண்டனர் என்பதும் அப்போதும் இது தலைப்பு செய்தியாக ஊடகங்களில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் அவ்வப்போது திடீர் திடீர் என மோதி வருவது விளையாட்டில் உள்ள சுவாரசியத்தை கெடுக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி எப்போதும் ஆக்ரோஷத்திற்கு பெயர் பெற்றவர் உணர்ச்சிவசப்பட்டவர் ஆனால் அதே நேரத்தில் காம்பீர் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டதால்தான் அவர் ஆத்திரம் அடைந்து இருந்தார் பலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் விதிகளை மீறியதாக விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவருக்கும் 100% அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நேற்றைய போட்டியின் முடிவில் கோலி மற்றும் காம்பீர் ஆகிய இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்குவாதத்தில் பங்கேற்ற லக்னோ வீரர் நவீன் உல் ஹக் என்பவருக்கும் போட்டி ஊதியத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...