கெத்து காட்டிய காதல் ஜோடிகள்… கொத்தாகத் தூக்கிய போலீஸ்

ஆந்திராவில் கட்டிப்பிடித்துக் கொண்டே இருச்சக்கர வாகனம் ஓட்டிய ஜோடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொட்டிக்கிடக்கும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகுவது உண்டு. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்துள்ள கஜுவாக்க பகுதியில் வசிக்கும் காதல் ஜோடிகள் கட்டிப்பிடித்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளர்.

குழந்தைகளை கவனிப்பது தந்தையின் பொறுப்பு – ஐகோர்ட் அதிரடி!!

இவர்களின் செயல்களானது மற்ற வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. அதே சமயம் இவர் பைக்கிள் பயணம் செய்த வீடியோவை காரில் சென்றவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்ததையடுத்து காட்டுத்தீயாய் பரவ தொடங்கியது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதோடு காதல் ஜோடிகள் மீது தக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

18 குழந்தைகள் பலி! பிரபல நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தம்.!!

தற்போது 2 பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. மேலும், இரு வீட்டாரின் பெற்றோரை அழைத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.