வாகன ஓட்டிகளே உஷார்! விதி மீறி நம்பர் பிளேட்.. ஐகோர்ட் கிளை உத்தரவு!!

வாகனங்களில் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூரை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது. அப்போது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என மனுதாரர் மனுவில் குறிப்பிட்டு இருந்ததை அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் காண்பித்தார்.

மாணவர்களே அலர்ட்!! TANCET தேர்வு ஒத்திவைப்பு… எப்போது தெரியுமா?

இதனை பார்த்த நீதிபதி மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் பேசிய நீதிபதி மத்திய, மாநில அரசுகள் மோட்டார் வாகன சட்டத்தின்படி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வகையில் நம்பர் பிளேட் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இருப்பினும் சட்டத்திற்கு புறம்பாக தாங்கள் விரும்பிய அரசின் தலைவர் படங்கள் மற்றும் நடிகர்களின் படங்கள் நம்பர் பிளேட் இடம் பெறக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

குடிபோதையில் இளம்பெண் அட்ராசிட்டி… கேரளாவில் பயங்கரம்!!

அதோடு வாகன போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இது குறித்து தினந்தோறும் வாகன சோதனை நடத்த வேண்டும் எனவும், விதிகளை மீறும் வாகனங்கள் மீது அதிகப்பட்ச அபராதம் விதிக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்துவைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.