Connect with us

‘அதிகார மீறல்-காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!’: திருமாவளவன்;

தொல் திருமாவளவன்

தமிழகம்

‘அதிகார மீறல்-காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!’: திருமாவளவன்;

‘அதிகார மீறல்-காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!’: திருமாவளவன்;

தமிழ்நாட்டில் மெல்லமெல்ல மதக் கலவரங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இதனால் ஒரு மதத்தினர் பிற மதத்தினரை வன்மையாக தாக்குகின்றனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு அதிகாரிகளே துணை நிற்பது பலருக்கும் ஆச்சரியம் அளிப்பதாக காணப்படுகிறது.

அதிகார மீறல் தொடர்பாக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்ட காவல் அதிகாரியின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளனர்.

கோவையில் காந்தி நினைவு தினத்தை ஒட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காந்தி நினைவு நாளை ஒட்டி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.

ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின் போது காவல்துறையினர் அதனை தடுத்துள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். காவல் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

காந்தியைக் கொன்றது கோட்சே என்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள், இந்துமதவெறியர்கள் எனக் கூறக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஏன் காந்தியை கோட்சே கொல்லவில்லை என நினைக்கிறாரா? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

காந்தியைக் கொன்றது சரி என்று கோட்சேவை கொண்டாடும் கும்பலான சனாதன சங்கிகளுள் ஒருவரா? என்று திருமாவளவன் கேள்வி கேட்டுள்ளார். காவல் அதிகாரிகள் நடந்துகொண்ட போக்குகள் அணுகுமுறைகள் வன்மையான கண்டனத்துக்குரியது என்று திருமாவளவன் கூறினார். காவல்துறையின் இந்த போக்கு கருத்துரிமையை பறிக்கும் ஜனநாயக விரோதப் போக்கு, மதவாத நடவடிக்கையாகும் என்று திருமாவளவன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top