28, 29 ஆம் தேதி லீவு போடக்கூடாது! மீறினால் சம்பளத்தில் பிடிக்கப்படும்!!
கடந்த வாரம் புதுச்சேரி மாநிலத்தில் எல்கேஜி யூகேஜி போன்ற மழலையர் பள்ளிகளுக்கான வகுப்புகள் சேர்க்கப்பட்டது. அன்றைய தினம்தான் புதுச்சேரி மாநிலத்தில் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றினை புதுச்சேரி மாநில அரசு கூறியுள்ளது.
இந்த அறிவிப்பு அவர்களின் ஊதியம் பிடித்தம் பற்றியதாக காணப்படுகிறது. அதன்படி மார்ச் 28, 29ம் தேதியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களது பணிக்கு வராவிட்டால் கட்டாயம் அவர்களின் ஊதிய பிடிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு கூறியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் அனைத்து தடத்திலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் மார்ச் 28, 29ம் தேதியில் விடுப்பு எடுக்க கூடாது என்றும் அறிவித்துள்ளது. தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து ஊழியர் கண்டிப்பாக பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
