
News
2ஜி விவகாரம்: காங்கிரஸ் எம்பி தொடர்பு, மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு!
2ஜி விவகாரம்: காங்கிரஸ் எம்பி தொடர்பு, மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு!
தமிழகத்தில் மிகவும் பல சர்ச்சையான கருத்துகள் வழக்குகள் இன்றளவும் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று 2ஜி அலைக்கற்றை விவகாரம். இதுகுறித்து தற்போது மன்னிப்பு கோரினார் வினோத் ராய்.
அதன்படி 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் எம்பியை தொடர்பு படுத்தி கூறிய தன்னுடைய கருத்துக்காக மன்னிப்பு கோரினார் வினோத் ராய். இந்த வினோத் ராய் ஒன்றிய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக வினோத் ராய் அளித்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2ஜி அறிக்கையில் மன்மோகன்சிங் பெயரை சேர்க்க வேண்டாம் என சஞ்சய் நிருபம் கோரிக்கை வைத்ததாக வினோத் ராய் கூறியிருந்தார்.
2ஜி விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக வினோத் ராய் மீது சஞ்சய் நிருபம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சஞ்சய் நிருபத்துக்கு மனவுளைச்சல் ஏற்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் வினோத் ராய்.
இதுதொடர்பாக பொய்யான அறிக்கை அளித்ததற்காக வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சஞ்சய் நிருபம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
