விநாயகர் உருவம் நமக்கு உணர்த்து சேதி என்னவென தெரியுமா?!

காரணமில்லாமல் காரியமில்லை… இது மனித வாழ்வுக்கு மட்டுமல்ல! இறைவனுக்கும் பொருந்தும். ஒவ்வொரு இறைவன்/வியின் தோற்றத்திற்கான காரணம் எதாவது ஒரு தீமையை அழிப்பதற்கோ அல்லது மனிதனை பக்குவப்படுத்த ஒரு கருத்தினை சொல்லவோதான் இருக்கும். அதன்படி விநாயகரின் தோற்றத்தின் காரணத்தை பார்த்தோம். அவர் யானை தலையுடனும், அகண்ட காது, தொப்பையுடன் இருக்க என்ன காரணம் என பார்க்கலாம்..

விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரண்டு காதுகள், மூன்று திருக்கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறெழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் ஏழேழு பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.

மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் உலகத்துக்கு உணர்த்தவே இப்படி ஒரு தோற்றத்தில் விநாயகர் உள்ளார்.. அகண்ட காது அதிக விசயங்களை கேட்டறிந்து நல்லவைகளை மட்டும் உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென உணர்த்துகிறது. விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் கொண்டு உலகம் அனைத்தும் தன்னுள்ளே இருப்பதை விநாயகரின் உருவம் உணர்த்துகிறது.
விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். இரு சக்திகளோடு இருந்தாலும் அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார். விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீச முனிவரது புதல்வி…

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது ஏன்?!

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்கள் மனிதர்களை துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பபர்களை அனலாய் மாறி தகித்து விடுவான், அவனை பிரம்மா, இந்திரனால்கூட அடக்க முடியவில்லை.  சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், பிள்ளையாருக்கு கட்டளை இட்டார், பிள்ளையார் அசுரனிடம் மோதினார். ஆனால், அவனை வெற்றி கொள்ள முடியலை.பிள்ளையாருக்கு கோவம் வந்து அனலாசுரனை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் போன அனலாசுரன் அனலாய் தகிக்க தொடங்கினான், குடம் குடமாக கங்கை நீர் கொண்டு வந்து பிள்ளையார் மீது ஊற்றியும் பலனில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் ஒரு அருகம்புல்லை கொண்டு வந்து பிள்ளையார் தலையில் வைக்க அனல் மறைந்து அனலாசுரனும் ஜீரணமாகி விட்டான், தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிப்போருக்கு எல்லா வளமும் அருள்வேன் என்று அனலாசுரனுக்கு வாக்களித்தார். அன்றிலிருந்து விநாயகருக்கு அருகம்புல் உகந்ததாய் மாறியது…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.