தனது மனைவியைப் பற்றி மனம் திறந்து பேசிய விமல்…

மணப்பாறையில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் நடிகர் விமல். இளம் வயதில் நடிப்பில் ஆர்வம் கொண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் கூத்துப் பட்டறையில் சேர்ந்து நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.

ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நடித்த ‘கில்லி’, ‘குருவி’, ‘கிரீடம்’ ஆகிய திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் சசிகுமார் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து குறைந்த பட்ஜெட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விமல். இவர் நடித்த ‘களவாணி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று விமலின் கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து ‘தூங்கா நகரம்’, ‘எத்தன்’, ‘வாகை சூடவா’, ‘மாப்ள சிங்கம்’, ‘மன்னர் வகையறா’, ‘களவாணி 2’ போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

விமல் நடித்த ‘வாகை சூடவா’ திரைப்படம் நார்வே சினிமா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என ஏழு விருதுகளை வென்றது. மேலும் இந்தப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட விமல் தனது மனைவி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நானும் என் மனைவியும் ஓடிப் பொய் தான் திருமணம் செஞ்சுக்கிட்டோம். அப்போது நான் ஹீரோவாக நடிக்கவில்லை, என்னிடம் காசு, பணம் இல்லை. ஆனாலும் என்னை நம்பி வந்தார் என் மனைவி என்று கூறியுள்ளார் விமல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...