நடிகர் விமல் போதை பழக்கத்தில் இருந்து விடுபட யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வீட்டில் இருந்தே சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சினிமா துறையை பொறுத்தவரையில் சுமாராக வலம் வரும் நடிகர் விமல். இவர் நடித்த பசங்க, களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இருப்பினும் மற்ற படங்கள் எல்லாமே வந்த இடம் தெரியாமல் போனது. அதே சமயம் பண மோசடி, நடிகைகளுடம் கிசுகிசு என பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இந்த சூழலில் படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்து வருவதால் போதைக்கு அடிமையாகி கிசிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 24-ம் தேதி விமலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது.
பின்னர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் பெற்ற விமல் வீட்டிலேயே ரகசியாமாக சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிகிறது. தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்தவர்கள் மத்தியில் இவரும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.