விஷ சாராயம் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மதுவிலக்கு துறையைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தொடர்ந்து நடைபெற்று நடக்கிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர் குலைந்துள்ளது. விஷ சாராயம் குடித்ததில் 60 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.
விஷ சாராயம் தொடர்பாக முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால், மரணங்களை அரசு தடுத்து நிறுத்தி இருக்கலாம். 500 மதுபான கடைகளை மூடுவதாக சொல்லி,1000 மதுபான கடைகளை திறக்கின்றனர் என கடுமையாக சாடியுள்ளார்.