
Entertainment
இயக்குனர் ஷங்கருக்கு பிடிச்சுப் போன வில்லன்! யார் அது தெரியுமா.?
தமிழ் சினிமா உலகில் ரஜினி, விஜய், அர்ஜுன், கமல் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர்.எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி அதன் பின் இயக்குனராக உருவெடுத்தார்.
இவருடைய படங்கள் என்றாலே சிறந்த தொழில்நுட்பம் ,பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்கள் என அதிரடியாக அமைந்திருக்கும்.
தமிழில் வெளியான 2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது ராம் சரணுக்கு 15வது படம். இந்தப் படத்தில் இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் ஷங்கர், கமலை வைத்து இந்தியன் 2 படத்தை மீண்டும் எடுத்து உள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு உள்ளார். அதில் அண்மையில் எனக்கு பிடித்த வில்லனாக விஜய் சேதுபதி மாறி உள்ளார் என கூறி உள்ளார் ஒரு மாஸ் ஹீரோ தற்போது வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
மேலும் அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறுகின்றது, மேலும் அவர் வில்லனாக நடிக்கும் போது வேற லெவெலில் தன்மையாக இருக்கிறது. எனக்கு பிடித்த வில்லனாக விஜய் சேதுபதி இருக்கிறார் என கூறினார்.
குறிப்பாக சமீபத்தில் விஜய் சேதுபதி வில்லமான மாஸ்டர்,விக்ரம் போன்ற படங்களில் நடித்து அனைவரின்கவனத்தை ஈர்த்துள்ளார்.அந்த படங்களும் வெற்றி பெற்று வசூல் சாதனை வேற்று வருகிறது.
நயன்தாராவின் o2 படத்தின் விமர்சனம்!
இதனால் தான் இனி இயக்கும் படங்களில் விஜய் சேதுபதியை வில்லனாக வைத்து இயக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் அப்படினா இனி ஷங்கர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்தியன் 2 படத்தில் கூட நடிகர் விஜய் சேதுபதிக்கு நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
