Connect with us

புதிய ரேஷன் கடைக்கு பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊர் மக்கள்

ration shop

தமிழகம்

புதிய ரேஷன் கடைக்கு பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊர் மக்கள்

பட்டுக்கோட்டை  பெருமாள்கோயில் ஆற்றங்கரை மற்றும் ஆர்.வி.நகரில் பட்டாசு வெடித்து ரேஷன் கடைகள் திறப்பு – பட்டாசு வெடித்து பொதுமக்கள் மகிழ்ச்சி 2 கிலோ மீட்டர் தூரம் சென்று வந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்து  எங்களின் 30 ஆண்டு கால கனவை நனவாக்கிய தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி 19 வது வார்டு எல்லைக்குட்பட்ட பெருமாள்கோயில் செங்குண்டு,  செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அறந்தாங்கிரோடு வ.உ.சி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். இதனால் காலவிரையமும், அலைச்சலும் அதிகமாகி வந்தது.

இதை கருத்தில்கொண்டு பெருமாள்கோயில் பகுதியிலேயே ஒரு முழு நேர ரேஷன் கடை அமைத்துதர வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெருமாள்கோயில் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து

பெருமாள்கோயில் ஆற்றங்கரை பகுதியில் முழு நேர ரேஷன் கடை அமைக்க திட்டமிட்டு ஒப்புதல் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்பேரில், இந்த முழு நேர ரேஷன் கடை விடுமுறை நாட்களை தவிர மீதி உள்ள அனைத்து நாட்களிலும் செயல்படும் என்றும் அறிவித்தது. அதன்படி பெருமாள்கோயில் ஆற்றங்கரை பகுதியில் இன்று முழு நேர ரேஷன் கடை துவக்க விழா நடந்தது. துவக்க விழாவிற்காக அந்த பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விழாவில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை கலந்து கொண்டு 625 பயனாளிகளை கொண்ட பெருமாள்கோயில் முழு நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி விழாவை துவக்கி வைத்தார். அதேபோல் ஆர்.வி.நகரிலும் அப்பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான 527 பயனாளிகளை கொண்ட ஆர்.வி.நகர் முழு நேர ரேஷன் கடையையும் எம்.எல்.ஏ அண்ணாதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

இது குறித்து ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கவந்த செங்கமேடு, செங்குண்டு  பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால் பல ஆண்டுகளாக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அறந்தாங்கிரோடு வ.உ.சி நகரில் உள்ள  உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தோம்.

ரேஷன் கடையில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நாங்கள் காலையில் பொருட்கள் வாங்க சென்றால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வருவதற்கு வெகுநேரம் ஆகிவிடும். இதனால்  கால விரையமும், அலைச்சலும் அதிகமாகி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தோம். இதனால் எங்களுடைய பெருமாள்கோயில் பகுதிக்கு தனியாக ஒரு முழு நேர ரேஷன் கடை அமைத்துதர வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்ததாம்.

இந்நிலையில்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  எங்களுடைய பல ஆண்டுகால கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து எங்கள் பெருமாள்கோயில் பகுதிக்கு தனியாக முழு நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் எங்களுடைய 30 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. எங்களுடைய கனவை நனவாக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் பகுதி மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top