விவசாயத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கிராமம்! குவிந்த போலீஸ்;ஒன்று திரண்ட ஊர் வாசிகள்!!

தற்போது நம் தமிழகத்தில் பல பகுதிகளில் அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல செல்கிறது. இதன் மத்தியில் தனியார் நிலத்திற்கு டேமில் இருந்து தண்ணீர் குடிக்க கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குண்டேரிப்பள்ளம் அணையில் நடந்துள்ளது. அதன்படி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் இருந்து தனியார் நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அந்த பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.குண்டேரிப்பள்ளம் அணை

கிராம மக்களின் எதிர்ப்பால் குண்டேரிபள்ளம் அணையில் கிட்டத்தட்ட 320 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தனியாருக்கு சொந்தமான 50 ஏக்கர் விவசாய நிலம் ஒன்று உள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணை அருகே தங்கவேல் என்பவர் நிலத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல முயற்சி எடுத்துள்ளனர். தண்ணீர் எடுத்து சென்றால் குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம் உள்பட 10 கிராமங்கள் பாதிக்கும் என கூறி கிராம மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நாலரை கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பாதிக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் எதிர்ப்பால் அந்த பணிகள் பாதிப்படைந்துள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி இன்று போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிக்கும் பணி தொடங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வினோபா நகர் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment