
Tamil Nadu
கிராம சபை கூட்டம் ;; தேதி அறிவிப்பு !!
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே தொழிலாளர் தினமான மே 1 தேதி நடைபெறும் கிராமசபையில் கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள், பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம், நெகிழி உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டை தடை செய்தல், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிகிறது.
ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் பொதுமக்கள் பங்கேற்று ஊராட்சிகளின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் என தெரிகிறது.
மேலும், கிராம சபை கூட்டங்களில் பங்கேற்போர் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
