கிராம உதவியாளர் தேர்வு முடிவுகள் எப்போது?

கிராம உதவியாளர் தேர்வு டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராம உதவியாளர் தேர்வு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது என்பதும் 2748 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த தேர்வை எழுதலாம் என்பதும் எழுத்து தேர்வு மற்றும் வாசிப்பதை எழுதும் தேர்வு ஆகியவை கொண்ட இந்த தேர்வில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதியவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த தேர்வு முடிவுகளை https://www.cra.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.