தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடத்தில் கோப்ரா படமானது பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது.
இந்நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் 61 படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தினை கீரின் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல் ராஜா நீலம் ப்ரொடக்ஷன் உடன் இணைந்து தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதாக தெரிவிறது. இதற்கிடையில் சியான் 61 படத்தின் அப்டேட் ஒன்று இணைத்தில் வெளியாகியுள்ளது.
அதன் படி, சியான் 61 படத்திற்கு தங்கலான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
#Chiyaan61 is the journey of #THANGALAAN'S pursuit of Happiness! @chiyaan @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @thehari___ @gvprakash @Lovekeegam @kishorkumardop @EditorSelva @anthoruban @moorthy_artdir @aegan_ekambaram @ANITHAera pic.twitter.com/JIZV2xHZGH
— pa.ranjith (@beemji) October 23, 2022