விக்ரமின் ‘மகான்’: துருவ் விக்ரம் ஃபர்ஸ்ட்லுக்

03b0c19580e5403f6d70e37ef6843cc1

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் திரைப்படம் மகான். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் துருவ் விக்ரம் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் இந்த படத்தில் தாதா என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அவருடைய அட்டகாசமான போஸ் குறித்த செகண்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி இது குறித்த வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.