சூப்பர் ஸ்டார் படத்தில் விக்ரம் பட ஏஜெண்ட் டினா வா? வேற லெவல் அப்டேட் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளிவந்தது. இப்படம் வெளிவந்த நாள் முதல் இன்று வரை ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கமல் ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலைக் ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் ஹீரோக்களை தொடர்ந்து படத்தில் நடித்த ஏஜெண்ட் டினா கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரைப்படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றும் வசந்தி தான் ஏஜென்ட் டீனா.

new project 2022 06 06t083754

திரையுலகில் வசந்தி, குழு நடனக் கலைஞராக அறிமுகமாகி, அவரது திறமையால், பல நடன இயக்குநர்களுடன் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் , பல டாப் ஹீரோக்களுக்கு இவர் கோரியோகிராப் செய்துள்ளார். 30 வருட அனுபவம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள வசந்தி, விக்ரம் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

மேலும் விக்ரம் படத்தின் சிறிய அதிரடி காட்சியில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார். மேலும அவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதாக தகவல் வருகிறது .

கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதி பதில் புஷ்பா வில்லனை களமிறக்கும் படக்குழு !

 

image 1

இந்நிலையில் தமிழை தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்து வரும் திரைப்படம் Christopher அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஏஜெண்ட் டினா புகழ் வசந்தி நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த ஏஜெண்ட் டினா வசந்திக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment