விக்ரமின் கோப்ராவிற்கு வந்த சோதனையா இது ! படத்தை ஓட வைக்க புது முயற்சி ?

சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து எழுத்து,இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்து வரும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகும்.இத்திரைப்படம் வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கயுள்ளார்.

இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.தமிழகத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு கோப்ரா படத்தின் FDFS திரையிடப்பட்டது. இப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் கண்டுகளித்தனர்.

fv8adsbuiaeijr11 1655997971 1

படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் விக்ரம் இந்த படத்தில் 7 விதமான கேரக்டரில் நடித்துள்ளது ஒரு பலமாக அமைந்துள்ளது.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் படம் திரையரங்குகளில் வந்தாலும் கோப்ரா திரைப்படம் மூன்று மணிநேரம் மூன்று நிமிடம் மூன்று விநாடி நீளம் கொண்டது படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளது.

தனுஷின் திருச்சிற்றம்பலம் தெறிக்க விடும் ஹிட் – 100 கோடியை தொட்டது !

cobra1 tile 1661913498 1

அதனால் படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் படத்தின் 30 நிமிட காட்சிகள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியானதால் ரசிகர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment