விக்ரம் பட ஏஜெண்ட் டீனா அடுத்து விஜய் படத்துலயா? லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளிவந்தது. இப்படம் வெளிவந்த நாள் முதல் இன்று வரை ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஹீரோக்களை தொடர்ந்து படத்தில் நடித்த ஏஜெண்ட் டினா கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரைப்படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றும் வசந்தி தான் ஏஜென்ட் டீனா.

lokesh 1659524447

திரையுலகில் வசந்தி, குழு நடனக் கலைஞராக அறிமுகமாகி, அவரது திறமையால், பல நடன இயக்குநர்களுடன் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் , பல டாப் ஹீரோக்களுக்கு இவர் கோரியோகிராப் செய்துள்ளார். 30 வருட அனுபவம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள வசந்தி, விக்ரம் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

மேலும் விக்ரம் படத்தின் சிறிய அதிரடி காட்சியில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார். தமிழை தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்து வரும் திரைப்படம் Christopher அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஏஜெண்ட் டினா புகழ் வசந்தி நடித்து வருகிறார்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு – மல்லிப்பூ வீடியோ பாடலில் காணாத காட்சிகள்!

லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சினா சும்மாவா! வள்ளல் பிரபுவாக மாறி வழங்கும் அன்னதானம்!

தற்போழுது விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்யுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றுவார் மற்றும் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும். இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்திலும் ஏஜெண்ட் டினா லோகேஷியுடன் மீண்டும் இணைய உள்ளார்.கமலை தொடர்ந்ந்து விஜயுடன் நடிக்க உள்ளார். அதுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment